Shareகாதல் கல்யாண யோகம் கை கூடி வரும் ராசி
ஜோதிட ரீதியாக காதல் திருமணம் வெற்றி பெறுமா?
திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா அல்லது அவர்களின் விருப்பத்தின் பெயரில் நடைபெறும் திருமணமா என்பதை ஜாதகத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ள இயலும். ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கின்ற கிரக நிலைகள் அவர்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களுடைய வாழ்க்கைத் துணையையும் நிர்ணயம் செய்கின்றன.
காதல் திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்களுக்கு பிடித்த ஒருவரை விரும்பி அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உறவாகும். சில நேரங்களில் பெரியோர்களின் சம்மதம் அல்லது அவர்களின் சம்மதம் இன்றியும் மனம் ஒத்த இவர்கள் தங்கள் திருமணத்தை நிகழ்த்திக் கொள்கின்றனர்.
காதல் திருமணம் செய்வோருக்கு பொருத்தம் என்பது வேண்டியதில்லை
என்று மூல ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், திருமணத்தில் முதன்மையானது, மனப்பொருத்தமே.
ஜோதிடத்தில் ஒருவருக்கு எழும் எண்ணங்கள் அவருடைய ஜாதகத்தில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து அறிந்து கொள்ளப்படுகின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலிமையான கிரகங்கள் இருந்தாலும் அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்து இருந்தாலும் அவர்கள் காதல் புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.
ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர காரகனான சுக்கிரன், ராகு, கேது, சனி இவர்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமும், களத்திர ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்கள் காதலில் விழுந்து திருமணம் புரிவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
பரணி, பூராடம், ஆயில்யம் ஆகிய நட்சத்திர சாரத்தில் லக்கினங்கள் அமைந்திருந்தால், அவர்களுக்கு காதல் உணர்வு வெளிப்படும்.
காதல் திருமண அமைப்பு எப்படி இருக்கும்?
உங்கள் ஜாதகத்தில் உள்ள 5ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 7ம் இடத்தில் இருந்தாலோ, 7ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தில் இருந்தாலோ, அல்லது இருவரும் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பதாலும் காதல் அமைப்பு இருக்கும்.
ரிஷப ராசிக்கு 5ம் வீட்டு பதிபதியான புதன் 8ம் வீடான விருச்சிகத்தில் இருந்தாலோ,
ரிஷபத்திற்கு 7ம் அதிபதியான செவ்வாய் கன்னியில் அமர்ந்திருக்க வேண்டும்
அல்லது புதன் உங்கள் லக்கினத்திற்கு 3ம் வீட்டு அதிபதியும் ஒன்றாக சேர்ந்து உங்களின் 7ம் அதிபதி வீட்டில் அல்லது நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
கும்ப லக்கினம் சூரியன் மிதுனத்தில் அமர்ந்து புதனும் சனியும் 11ஆம் வீட்டில் இருந்து பார்த்தாலோ காதல் திருமணம் நடக்கும்.
அல்லது கும்ப லக்கினம் புதன் செவ்வாய் ஒன்று சேர்ந்து அவர்களை சுக்கிரன் பார்த்தாலோ
அல்லது கும்ப லக்கினம் புதன் சிம்மத்தில் பூரம் நட்சத்திர சாரத்தில் நின்றாலோ
12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான திருமண பொருத்தம்
ஆணின் ஜாதகத்தில் திருமணத்தை நிர்ணயம் செய்வது சுக்கிரன் ஆவார். அதேபோலவே பெண்ணின் ஜாதகத்தில் திருமணத்தை நிர்ணயம் செய்வது செவ்வாய் ஆவார். அவர் ராகு, கேது மற்றும் சனியினால் பாதிக்கப்படும் பட்சத்தில் காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.
காதல் என்பது இரு மனங்கள் ஒன்றிணைந்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் உன்னதமான உறவாகும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இந்த உறவினை பயன்படுத்தி பல தவறான நிகழ்வுகளும், இழப்புகளும் உருவாகின்றன.
எனவே, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதல் எண்ணங்கள் ஒருவர் மீது ஏற்படும்போது காதலிக்கும் நபரானது தமக்கான முழு பாதுகாப்பையும், புரிதலையும் அளிக்கும் பட்சத்தில் அது காதலாக உருமாற்றம் அடைத்து வெற்றியை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும்.
காதல் என்பது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை மட்டும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு உன்னதமான உணர்வாகும். பருவ வயதில் ஏற்படும் காதலை காட்டிலும், நடுத்தர வயதில் தனது துணைவருடன் ஏற்படும் காதலானது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீண்ட நெடிய பயணத்தை கூட சிறு தூரம் பயணம் போன்று கடக்க வைக்கும்.